பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

டாஸ்மாக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள பல்வேறு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று(மே 16) சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.
தனுஷ் நடிக்கும் ‛இட்லி கடை', சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி', சிம்பு நடிக்கும் 49வது படம் என ஒரேநேரத்தில் மூன்று முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். இதுதவிர இதயம் முரளி என்ற படத்தையும் இயக்கி, தயாரிக்கிறார். இதயம் முரளி தவிர்த்து மற்ற படங்கள் ஒவ்வொன்றுமே தலா ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகிறது. ஒரேநேரத்தில் இத்தனை படங்கள் தயாரிக்க பணம் வந்தது எப்படி என்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகவும் சொல்கிறார்கள்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்
ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்தவர். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி தாரணியை திருமணம் செய்தவர். தாரணியின் தந்தை பிரபல தொழிலதிபர் சி.கே. ரங்கநாதன். இவர் மகன் மனு ரஞ்சித்தைதான், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணம் செய்துள்ளார்.