என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி நடிக்கும் தக்லைப் பட பாடல் வெளியீட்டு விழா, மே 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் யார் சிறப்பு விருந்தினர். மணிரத்னம், கமல், ஏ.ஆர்.ரகுமான் இணையும் படம் என்பதால், மிகப்பெரிய விஐபியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டு நடந்த பொன்னியின் செல்வன் படவிழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நான் பெரிய பழுவேட்டையராக நடிக்க ஆசைப்பட்டேன் என தொடங்கி, பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார். அந்த பேச்சு படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது.
இந்நிலையில் மே 24ல் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படக்குழுவை வாழ்த்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரளாவில் இருக்கும் ரஜினிகாந்த் சில நாட்களில் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது. மணிரத்னம், கமல் அழைத்தால் அவர் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் அழைப்பார்களா? அவர்கள் திட்டம் என்ன என்பது சஸ்பென்ஸ ஆக இருக்கிறது.