நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

அபூர்வ லக்கியா இயக்கத்தில் சல்மான்கான் தயாரிப்பு, நடிப்பில் உருவாகி வந்த படம் 'பேட்டில் ஆப் கல்வான்'. இந்தப் படத்தின் பெயரை தற்போது 'மாத்ருபூமி' எனப் பெயர் மாற்றி புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவை வெளியான பின்பு படத்தின் பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளது ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.
2020ம் வருடம் இந்திய - சீனா பார்டரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா, சீனா வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெளியீட்டிற்கு முன்பாக தங்களுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதால் இப்படத்திற்கு தணிக்கைக்கு முன்பாக இருந்த சில சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதியி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.