Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர்

17 மார், 2026 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Anil-Kapoor-still-receives-royalties-from-Slumdog-Millionaire
Advertisement

டேனி பாய்ல் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தேவ் பட்டேல், ப்ரீத்தா பின்டோ, மதுர் மிட்டல், அனில் கபூர் மற்றும் பலர் நடிப்பில் 2009ல் வெளியான ஆங்கிலப் படம் 'ஸ்லம்டாக் மில்லியனர்'.

81வது ஆஸ்கர் விருதுகளில் அப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை, சிறந்த பாடல், ஒலிக் கலவை என 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

அந்தப் படத்தில் நடித்ததற்காக தற்போதும் பணம் பெற்று வருவதாக சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.

“இத்தனை வருடங்களாகிவிட்டது, இப்போதும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக நான் பணம் பெற்று வருகிறேன். நேற்று கூட எனக்கு 3000 பவுண்டுகள் செக் வந்தது. நான் வரியைக் கட்டுவதால் இதைத் தயக்கமின்றி சொல்வேன். இதுவரையில் மொத்தமாக அரை மில்லியன் பவுண்டுகள் எனக்கு வந்துள்ளது. இதை நான் அவர்களிடம் கேட்கவில்லை, அவர்களாகத் தந்து வருகிறார்கள்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “கற்றுக் கொள்வதற்காகவே அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். அவர்கள் என்னை சந்தித்த போது எனக்கான சம்பளத்தைத் தரும் நிலையில் இல்லை என்றார்கள். நான் உங்களிடம் அது பற்றிப் பேசினேனே என்று கேட்டேன். உங்களுக்கு பணம் வாங்காமல் நடித்துத் தருகிறேன் என்றேன். இதை அவர்களாகவே தற்போது தந்து வருகிறார்கள்” எனக் கூறினார்.

ஆங்கிலேயே நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் அவர்களது வியாபார முறைப்படி லாபத்தில் பங்கு அல்லது ராயல் முறை சம்பளம் என்பதை அனில் கபூரின் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளார்கள். அதனால்தான் அவர் தற்போதும் அதற்கான தொகையைப் பெற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்''மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ... பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
17 மார், 2026 - 11:03 Report Abuse
Senthoora நல்லவேளை இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை, இசை அமைத்து இருந்தால் அதுக்கும் ராய்லட்டி கேட்டிருப்பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap