டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். மும்பையில் படத்தைப் பார்த்த பின் இயக்குனர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ஹிந்தியில் இப்படத்திற்காக ஆரம்ப அறிமுகக் காட்சிக்கான பின்னணிக் குரலை அனில் கபூர் தான் கொடுத்திருந்தார்.
“மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவம். பிடிப்பான நாடகம், மயக்கும் இசை, காவியமான படைப்பு ஆகியவை ஆரம்பத்திலிருந்தே என்னைக் கவர்ந்தன. மிகச் சிறப்பாக நடித்த விக்ரமிற்கு சத்தம் போட்டு ஒரு பாராட்டு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயின் அற்புதமான நடிப்பு.
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு தூக்கியுள்ளது. எனது நண்பன் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். ஆடை அலங்காரத்தில் ஏகலகானி அசத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நானும் சிறு பங்காக இருப்பது எனக்குப் பெருமையும், மரியாதையும். ஒரு நிஜமான மாணிக்கத்தைத் தந்த மணிரத்னம் மற்றும் மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் கதாநாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.