பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். இளம் வயதிலேயே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி சர்ச்சை ஆனது. கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
தற்போது மகன் ஆர்யன் கானின் கவனத்தை வேறு வழியில் திருப்ப முடிவு செய்திருக்கிறார் ஷாருக்கான். ஆர்யன் கான் தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார். இதனால் அவரை இயக்குனராக்குகிறார் ஷாருக்கான். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இணைந்து 'ஸ்டார்டம்' என்ற வெப் தொடரை ஷாருக்கான் தயாரிக்கிறார். இந்த தொடரை இயக்கும் பொறுப்பை மகனிடம் கொடுத்திருக்கிறார். இது பாலிவுட் சினிமாவின் பின்னணியில் இருக்கும் அண்டர்வேர்ல்ட் பற்றிய கதையாம். சினிமாவுக்கு தாதாக்களுக்கும் உள்ள தொடர்பு. போதை மருந்து புழக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த தொடரில் வெளிப்படையாக காட்ட இருக்கிறார்களாம்.