மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் |

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியானாலும் கூட, ஆயிரம் கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி கட்டியிருந்த அதிநவீன கலாச்சார மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டு தூதரான இம்மானுவேல் லெனனனும் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்வில் ஷாருக்கானை சந்தித்து பேசிய அவர் பிரான்ஸ் நாட்டில் ஷாருக் கான் தனது படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோளும் வைத்துள்ளார். இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இம்மானுவேல் லெனன், “ஷாருக்கானை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். மீண்டும் அவரை பிரான்சில் வந்து படப்பிடிப்பு நடத்துங்கள் என கூறி கன்வின்ஸ் செய்ய முயற்சித்தேன். பிரான்சில் உள்ள மக்கள் பாலிவுட்டில் உள்ளவர்களை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் படப்பிடிப்பு நடத்த அழைத்ததிலும் ஷாருக்கானை கன்வின்ஸ் செய்ய முயற்சித்தேன் என்று அவர் கூறியதிலும் இருந்து, இதற்கு முன்பு ஷாருக்கான் பிரான்சில் படப்பிடிப்பு நடத்த சென்ற சமயத்தில் ஏதோ சங்கடங்களை சந்தித்திருக்கிறார் என்பதையும் அதனால் அவரது சமீபத்திய படங்களின் படப்ப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்திருந்தாலும் பிரான்ஸை அவர் தவிர்த்து வருகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.