இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
தயாரிப்பாளர் போனிகபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நேற்று திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்தார். அவருடன் அவரது தங்கை குஷி கபூரும், ஜான்வியின் காதலர் என்று சொல்லப்படும் ஷிகர் பஹாரியா ஆகியோரும் சென்றிருந்தனர்.
நேற்று காலையிலேயே அவர்கள் தரிசனம் செய்துள்ளனர். கோயிலிலிருந்து வெளியில் வந்து பின் அவர்கள் மூலவரை நோக்கி விழுந்து கும்பிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் போதெல்லாம் ஜான்வி, பாவாடை தாவணி அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவரும் தங்கையும் பாவாடை தாவணியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஜுனியர் என்டிஆர் ஜோடியாக விரைவில் ஜான்வி கபூர் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'லவ் டுடே' படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் குஷி கபூர் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.