நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம், 'ஜவான்'. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகின்ற செப் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் சமீபத்தில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் , “ஜவான் படத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது . இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். ஜவான் படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்” என பகிர்ந்துள்ளார் .