சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத். படங்களில் நடிப்பதை விட விதவிதமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
படு கவர்ச்சியான ஆடைகள் அணிந்ததாக, பொது இடங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியதாக இவர் மீது ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டார் அதில் “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்”என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். பலர் உங்கள் பலமே அதுதானே... நீங்கள் நல்ல ஆடைகள் அணிந்தால் நன்றாக இருக்க மாட்டீர்கள் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த டுவிட்டை வெளியிட்ட சில மணி நேரத்திலே. “ஏப்ரல் பூல். நான் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானவள் என்று எனக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் உர்பி மீது ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.