50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரசேகர் கல்வி குடும்பத்தில் பிறந்தவர். எல்லோரும் படித்தபோது சந்திரசேகருக்கு மட்டும் கலை மீது ஆர்வம். உள்ளூரில் நாடகத்தில் நடித்தவர், சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடினார். அதற்கு உதவியாக'திரை வாணன்' என்ற சினிமா பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டே வாய்ப்பு தேடினார்.
அந்த நேரத்தில் சென்னையில் தூர்தர்ஷன் கேந்திரா தொடங்கப்பட்டது. கோபாலி மற்றும் தஞ்சை வண்ணன் போன்ற தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாகி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து அவருக்கு உதவியாளராக பணியாற்றி அவரின் அன்பை பெற்றார்.
பாரதிராஜா அவரை 'புதிய வார்புகள்' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தார். தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள் படத்தில் நடித்தார். இதற்கு இடையில்தான் அவர் 'ஒரு தலைராகம்' படத்தில் நடித்து புகழ்ெபெற்றார்.
சந்திரசேகர் அறிமுகமான படம் 'ஒரு தலைராகம்' என்றும், அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர் என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரதிராஜாவின் அறிமுகம்தான் சந்திரசேகர்.
திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்ட 100 படங்களில் முன்னணி வேடங்களிலும், 200 படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் அரசியலில் நுழைந்து சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடியதால் அவரது பெயரை வாகை சந்திரசேகர் என்று மாற்றினார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. வாகை சந்திரசேகருக்கு இன்று 68வது பிறந்தநாள்.