டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

காரத்தே மற்றும் தற்காப்பு கலை மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி சில படங்களில் நாயகனாகவும், பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்துள்ள படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்'. இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.
படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது.
இதை முன்னிட்டு படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் படத்தின் இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசியதாவது: 8 வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை மனோஜ் பெனோ அவர்களிடம் கூறினேன்; எட்டு வருடங்களுக்குப் பிறகும் கூட என்மீது நம்பிக்கை வைத்து பாபி பாலச்சந்திரனின் பிடிஜி யுனிவர்சல் சார்பில் இப்படத்தை தயாரித்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
படத்தின் கதை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்; அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யாவை தேர்ந்தெடுத்தோம். அதே போல இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள், அவர் இந்த படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது போன்று இருந்தது. மேலும் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது 5 படங்களில் பணியாற்றியது போல இருந்தது.
இந்த படத்தில் மறைந்த ஷிஹான் ஹுசைனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்து விட்டுத்தான் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மீண்டு வந்து நான் படத்தை பார்ப்பேன் என்றார். ஆனால் அவரால் பார்க்க இயலாமல் போய்விட்டது. அவரது இழப்பு எங்களுக்கும் பெரிய இழப்பு, என்றார்.