டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தெலுங்கில் பிரபல வில்லன் மற்றும் குணசத்திர நடிகர் ஜெகபதி பாபு, தனியார் சேனல் ஒன்றில் டாக் ஷோவை நடத்தி வருகிறார். இதில் வாராவாரம் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடனும் ரம்யா கிருஷ்ணனுடனும் சில படங்களில் இணைந்து நடித்த மறைந்த நடிகை சவுந்தர்யா குறித்து பேச ஆரம்பித்ததும் ரம்யா கிருஷ்ணன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆனால் அடுத்த நொடி படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனும் சவுந்தர்யாவும் இணைந்து நடித்த வீடியோ கிளிப் ஒன்று திரையிடப்பட்டபோது அதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
ரம்யா கிருஷ்ணன் கூறும்போது, “சவுந்தர்யாவுடன் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் ரொம்பவே அப்பாவி பெண்ணாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு இளம் தேவதையாக உருவாக்கிக் கொள்ளும் வரை அவரது வளர்ச்சியை நேரில் இருந்து பார்த்தவள் நான். தன்னுடைய புகழ் எப்போதுமே தன்னை மாற்றிக் கொள்ள அவர் அனுமதித்ததே இல்லை. அவர் உண்மையிலேயே ஒரு நல்ல தோழி. அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதநேயம் கொண்டவர்” என்று தெரிவித்தார்.
90களில் ஆரம்பத்தில் சினிமாவை நுழைந்து தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர் சவுந்தர்யா. தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவரும் ரம்யா கிருஷ்ணனும் அம்மன், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2004ல் ஒரு விமான விபத்தில் நடிகை சவுந்தர்யா இறந்தார். இந்த நிலையில் தான் சவுந்தர்யாவின் வீடியோ காட்சியை பார்த்ததும் கண்கலங்கி விட்டார் ரம்யா கிருஷ்ணன்.