லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை சவுந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் அது விபத்து அல்ல, கொலை என சமூக ஆர்வலர் ஒருவர் ஆந்திரா போலீஸில் புகார் அளித்துள்ளார். இதில் நடிகர் மோகன்பாபுவிற்கும் தொடர்பு உள்ளதாக அவர் கூறிய நிலையில் இதனை சவுந்தர்யாவின் கணவர் மறுத்துள்ளார்.
தமிழில் பொன்னுமணி, அருணாசலம், படையப்பா, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. கர்நாடகாவை சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். 2004ல் தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்றபோது அது விபத்திற்குள்ளாகி மரணம் அடைந்தார். விபத்து நடந்த சமயத்திலேயே இது விபத்து அல்ல என்பது மாதிரியான பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவின் கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‛‛நடிகை சவுந்தர்யா மரணம் அடைந்தது விபத்தால் அல்ல, கொல்லப்பட்டு உள்ளார். ஜலபள்ளி பகுதியில் சவுந்தர்யாவிற்கு 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை வாங்குவது தொடர்பாக நடிகர் மோகன் பாபு, சவுந்தர்யா இடையே பிரச்னை இருந்து வந்தது. சவுந்தர்யா இறந்தபின் அந்த நிலத்தை மோகன்பாபு சட்டவிரோதமாக ஆக்கிரமத்திருக்கிறார். அந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும். இந்த புகாரால் எனக்கு மோகன்பாபு தரப்பில் இருந்து மிரட்டல் வரலாம். ஆகையால் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த 6 ஏக்கர் நிலம் தொடர்பாகத்தான் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே பிரச்னை உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அவர் விபத்தால் இறக்கவில்லை, கொல்லப்பட்டிருக்கிறார் என ஒருவர் புகார் அளித்து இருப்பது தெலுங்கு, கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோகன்பாபுவையும் இதில் தொடர்புபடுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன்பாபு, நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுந்தர்யா கணவர் மறுப்பு
இந்நிலையில் சவுந்தர்யா மரணம் தொடர்பாக சிட்டிமல்லு அளித்த புகாருக்கு சவுசந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மோகன் பாபு உடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம். சவுந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தையும் அவர் வாங்கவில்லை. ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.