திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” |
தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து ஜோடியாக நடித்தவர் நடிகை சவுந்தர்யா. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமயத்தில் அரசியல் கட்சி ஒன்றின் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக தனது சகோதரருடன் தனி விமானத்தில் கிளம்பி சென்றபோது விபத்துக்குள்ளாகி அதிர்ச்சி அளிக்கும் விதமாக மரணமடைந்தார். சவுந்தர்யா அவ்வளவு சிறிய வயதில் இந்த உலகை விட்டு சென்றது அப்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது அந்த விமான விபத்தில் நானும் பயணித்திருக்க வேண்டியது என்று புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.
மீனாவும், சவுந்தர்யாவும் ஒரே சமயத்தில் முன்னணி நடிகைகளாக நடித்து வந்த நேரத்தில் போட்டி நடிகைகளாக இருந்தாலும் அவர்களுக்குள் மிகப்பெரிய நட்பு இருந்தது. இதுபற்றி மீனா கூறும்போது, “எங்களுக்குள் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி இருக்கும். சவுந்தர்யா ரொம்பவே திறமையான மற்றும் ஒரு அற்புதமான பெண். அது மட்டுமல்ல என்னுடைய நெருங்கிய தோழியும் கூட. அவரது திடீர் மரணம் கேட்டது என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இப்போது வரை கூட எனக்கு அந்த அதிர்ச்சி விலகாமல் தான் இருக்கிறது.
அவர் அந்தப் பிரச்சாரத்திற்காக பயணித்த அதே விமானத்தில் அன்றைய தினம் நானும் அவருடன் பயணித்து இருக்க வேண்டிய சூழல் அப்போது ஏற்பட்டது. என்னையும் அந்த பிரச்சாரத்திற்கு வரச் சொல்லி அழைத்திருந்தார்கள். ஆனால் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பியதால் எனக்கு அப்போது படப்பிடிப்பு இருப்பதாக கூறி அந்த பயணத்தை தவிர்த்தேன். ஆனால் அந்த பயணம் இப்படி ஒரு அதிர்ச்சியை தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.