2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரஜினி , கமல் ஆகிய இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை 'கூலி' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான கதை, இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். அதன்மூலம் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் ரஜினியின் இளைய மகளான இயக்குனர் சவுந்தர்யா ரஜினி அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளார்கள். ஆனால் அந்த மெகா படத்தை யார் இயக்குவார்கள் என்பது தெரியவில்லை. அந்த விபரங்கள் அனைத்தும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சரியான நேரத்தில் அந்த படம் குறித்து அறிவிப்பார்கள்'' என்று கூறினார்.
அதை அடுத்து அதே மேடையில் இருந்த கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ''மீண்டும் அவர்கள் இருவரையும் நாங்கள் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டோம். எல்லோரையும் போலவே அந்த ஒரு படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம்'' என்று கூறிய ஸ்ருதிஹாசன், ''ரஜினி சாரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது படையப்பா. அவருடன் கூலி படத்தில் இணைந்து நடித்ததால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.