'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது |

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மாதவனை வைத்து 'அதிர்ஷ்டசாலி' என்கிற படத்தை இயக்கி வருகிறார் மித்ரன் ஆர் ஜவஹர். இதில் சாய் தன்ஷிகா, மடோனா செபாஸ்டியன், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றும் நிதி பற்றாக்குறையால் படம் வெளியாகாமல் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஏ நிறுவனத்திடம் இருந்து இந்த படத்தை மொத்தமாக ஐயங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படத்தை திரையரங்குகளில் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.




