என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். இதுதவிர பிரபாஸ் உடன் ‛தி ராஜா சாப்' படத்திலும் நடிக்கிறார். வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். நேற்று அதுபோன்று ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ஒருவர் உங்களுக்கு பிடித்த தமிழ் படம் எது என கேட்க, ‛96' என்றவர், மற்றொருவர் பொழுபோக்கு பற்றி கேட்க, ‛‛வைல்ட் போட்டோகிராபி எனக்கு மிகவும் பிடிக்கும். காட்டில் இருப்பது என்றால் மகிழ்ச்சி'' என தெரிவித்தார். பிடித்த கிரிக்கெட் வீரர் தொடர்பான கேள்விக்கு ‛விராட் கோலி' என்றார்.
அடுத்தடுத்த படங்கள் பற்றிய கேள்விக்கு, ‛‛தமிழில் சர்தார் 2, மலையாளத்தில் ஹிருதயப்பூர்வம், தெலுங்கில் தி ராஜா சாப் ஆகிய படங்களில் நடிக்கிறேன். 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும்'' என்றார்.
ஒரு நடிகர் உடன் ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க வேண்டியிருந்தால் எந்த நடிகரை நீங்கள் தேர்வு செய்வீர்கள், ஏன் என கேட்ட ஒரு ரசிகருக்கு ‛பிரபாஸ் என பதிலளித்த மாளவிகா, ‛‛ஏனென்றால் அவரிடன் நிறைய சுவையான உணவுகள் இருக்கும். அதனால் அவருடன் இருந்தால் உணவை கண்டுபிடிப்பது பற்றிய கவலை இருக்காது'' என தெரிவித்துள்ளார்.