பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது | அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் | மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் |
தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று 'வட சென்னை'. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம். அதிக வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்ற படம்.
அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என கடந்த ஏழு வருடங்களாக ரசிகர்கள், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கேட்டு வருகிறார்கள். ஆனால், சமீப காலங்களில் வெற்றிமாறன், தனுஷ் இடையேயான நட்பில் விரிசல் விழுந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், 'வட சென்னை 2' படத்தை வேறு இயக்குனர், வேறு நடிகரை வைத்து தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வெற்றிமாறன் வந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறனின் உதவி இயக்குனரான கார்த்திகேயன் என்பவர் இப்படத்தை இயக்க, 'குட்நைட், குடும்பஸ்தன்' படங்களின் நாயகன் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் கூட முடிந்துவிட்டதாம். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.
'அன்பு' கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்காமல் 'வட சென்னை 2' வரவேற்பைப் பெறுமா?.