'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
சினிமா நடிகர்கள், நடிகையர் என்றாலே விலை உயர்ந்த கார்கள், பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். பெண்கள் என்றால் நகைகள், ஹேண்ட் பேக்குகள், ஆண்கள் என்றால் கார்கள், வாட்ச்கள் என அவை லட்சங்கள், கோடிககளில் மதிப்புள்ளவையாக இருக்கும்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜுனியர் என்டிஆர், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை அணிவதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் 'வார் 2' ஹிந்திப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை ஏர்போர்ட்டில் இறங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.
“ரிச்சர்ட் மில்லி ஆர்எம் 40-01 டர்பில்லோன் மெக்லரன் ஸ்பீட்டெய்ல்” என்பது அந்த வாட்ச்சின் பெயர். அதன் விலை சுமார் 7 கோடியே 47 லட்சம் என்கிறார்கள்.
ஜுனியர் என்டிர் தற்போது 'வார் 2' ஹிந்திப் படத்திலும், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது படத்திலும் நடித்து வருகிறார்.