‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் |

ஒரு மரணம் நடந்த வீட்டின் பின்னணியில் பல படங்கள் சமீபத்தில் வெளியானது. 'ஏலே, பெருசு, தலைக்கூத்தல், யமகாதகி' உள்ளிட்ட படங்கள் அந்த பின்னணியில் வெளிவந்தன. அந்த வரிசையில் அடுத்து வரும் படம் 'சாவீ'. ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ளார்.
'கைதி, மாஸ்டர்' படங்களில் நடித்த உதய் தீப், 'பேட்ட' படத்தில் நடித்த ஆதேஷ்பாலா, ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் நடித்துள்ளனர். ட்யூனர்ஸ் இசை அமைத்துள்ளார், பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு முதலில் 'சாவு வீடு' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும், திரையிட தியேட்டர் உரிமையாளர்களும் தயங்கினர். இதனால் சாவு வீடு என்பதை சுருக்கி 'சாவீ' என்று டைட்டில் வைத்துள்ளனர். படம் வருகிற 5ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் ஆண்டன் அஜித் கூறியதாவது: ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்" என்றார்.




