சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் போஸ்வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு தற்போது 'மா.பொ.சி' என்ற படத்தை இயக்கி வந்தார். இதில் விமல் நாயகனாகவும், கன்னி மாடம் படத்தில் நடித்த சாயாதேவி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்தின் நாயகனின் பெயர் 'மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்' என்பதை சுருக்கி 'மா.பொ.சி 'என்று வைத்திருந்தார்கள். ஆனால் இந்த தலைப்புக்கு மா.பொ.சியின் பேத்தி, எழுத்தாளர் பரமேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானமாம். மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதி. பொன்னரசனும் பொன்னுசாமியும்; கடைசிப் பெயர் சிவஞானமே. முகத்தில் மரு வைத்து மறைத்தாலும் மறைக்க முடியாதவராயிற்றே அவர் .
தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம். ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?” என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்களது எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான “மா.பொ.சி” திரைப்படத்திற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், 'சார்' என்ற என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.