சினிமா வேறு, குடும்ப வாழ்க்கை வேறு… : நிரூபித்த நடிகைகள் | 2வது திருமணம் பற்றி சூசமாக தகவல் வெளியிட்ட சமந்தா | சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை | ‛புஷ்பா 2' ; கூட்ட நெரிசலில் பெண் பலி : நடிகர் அல்லு அர்ஜுன் கைது | 100வது நாளில் 'தி கோட்' | 'புஷ்பா 2' வரவேற்பு : ராஜமவுலியை மிஞ்சினாரா சுகுமார்? |
பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா. இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அவரது படங்களுக்கு வசனமும் எழுதினார். தற்போது அவர் இயக்குனராகி உருவாக்கி வரும் படத்திற்கு 'மைலாஞ்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டது. இந்த தலைப்பை அவர் 10 வருடத்திற்கு முன்பே பதிவு செய்திருந்தார். ஆனால் இதே பெயரில் வேறொரு படம் வெளியாகி விட்டதால் இந்த தலைப்பை வைக்க பிரச்னை ஏற்பட்டது. இதனால் படத்தின் தலைப்பை 'அஜயன் பாலாவின் மயிலாஞ்சி' என்று மாற்றி உள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து இயக்குனர் அஜயன் பாலா கூறும்போது "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது" என்றார்.
இந்த படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
"மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகான காதல் கதையாக இதை செய்துள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் உருவாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது” என்கிறார் அஜயன் பாலா.