என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75 வயதில் சென்னையில் நேற்று காலமானார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சீரியல், டப்பிங் ஆர்டிஸ்ட், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்டவர்.
சினிமாவில் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர், கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவர். திடீரென நேற்று காலை காலமானது குறித்து விசாரித்தால், அவர் ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் செய்து இருக்கிறார். சமீபத்தில் துபாய் போயிட்டு வந்தார். அங்கே உள்ள உணவு, தண்ணீர் அவருக்கு செட் ஆகவில்லை. துபாயிலிருந்து சளி தொந்தரவு உடன் வந்துள்ளார். தவிர, அலைச்சல் வேறு. அந்த டென்ஷன் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்தவாரம் அவர் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதை பார்க்காமலே போய்விட்டார். தனது தந்தை, தாய், மனைவி கல்லறை இருக்கும் இடத்தில் தனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கல்லறை கட்டிவிட்டார். அதை ஒரு பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார். அந்த கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகத்தை கூட முன்பே முடிவு செய்துவிட்டார்.
அவர் மகள் கனடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். நாளை அவர் வந்துவிடுவார். ராஜேஷின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜேஷின் உடல் நேற்று எம்பார்மிங் செய்யப்பட்டுள்ளது. மகள் வர வேண்டி இருப்பதால் எம்பார்மிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.