சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று இரவு சென்னை நகரின் சாலைகளில் படுத்துறங்கியவர்களுக்கு போர்வை வழங்கினார். பலரை தூக்கத்தில் இருந்து எழுப்பாமல் போர்வையை போர்த்திச் சென்றார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் "நேற்று இரவு சாலையில் நடந்து சென்றேன். சாலையின் ஒரத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், குளிரில் நடுங்கிக் கொண்டும், கொசுக்களோடு போராடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்தேன்.
ஒரு போர்வை 100 ரூபாய் வரும். இது பெரிய விஷயமில்லை, நீங்கள் 35 ரூபாய் கொடுத்தால் போதும் என்னால் இந்த பணியை தொடரமுடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.