கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
இந்திய அளவில் சினிமா இசை என்பது இப்போது அதிக வருவாய் தரும் ஒரு துறையாக மாறிவிட்டது. யு டியூப், இசை இணைய தளங்கள், மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட பல தளங்களின் மூலம் சினிமா பாடல்களுக்கான வருவாய் கிடைத்து வருகிறது. அதனால், தங்களது படங்களில் அதிரடியான, உடனடியாக ஹிட் ஆகக் கூடிய பாடல்களை உருவாக்குவதில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு அதிக நெருக்கடி உள்ளது. இதன் காரணமாக இசையமைப்பாளர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருடைய சம்பளம் 15 கோடி என்கிறார்கள். அவர் இசையமைக்கும் படங்களின் உரிமையும் அந்த விலையை விடவும் அதிகம் போவதால் அந்த சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். அவருக்குப் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத், தமன் உள்ளிட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக வாங்குகிறார்களாம்.
அனிருத் இந்திய அளவில் பிரபலமாக உள்ளதால் அவருக்கு தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் படங்களுக்கு இசையமைத்தும் அவருடைய ஸ்டார் அந்தஸ்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.