பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் |

பாடகர்கள் திப்பு, ஹரிணியின் மகன் சாய் அபயங்கர் தான் தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாபிக். காரணம் 20 வயதான அவர் இசையமைக்கும் படங்கள் அப்படி. ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சூர்யா நடிக்கும் கருப்பு, கார்த்தியின் மார்ஷல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், சாந்தனு நடிக்கும் பல்டி, சிம்பு படம், அட்லி இயக்கி, அல்லுஅர்ஜூன் இயக்கும் படம் என 7 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
இதில் எந்த படமும் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. அவருக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் போட்டி. பாடல் கொடுக்காமல் அனிருத் இழுத்தடிப்பதால் கச்சேரி, டூர் என்று செல்வதால் அவருக்கு பதில் சாய் அபயங்கரை உருவாக்குவதாக தகவல்.
இந்நிலையில், சென்னையில் நடந்த பல்டி பிரஸ் மீட்டில் உங்களுக்கும் அனிருத்துக்கும் இடையே போட்டியா என்ற கேள்விக்கு எனக்கும் அனிருத்துக்கும் எந்த போட்டியும் கிடையாது. அவர் நிறைய சாதனை பண்ணிட்டாரு. நான் இப்பதான் ஆரம்பித்து இருக்கிறேன். எனக்கு எப்போதும் உங்க அன்பு, ஆதரவும் தேவை '' என்று சிம்பிளாக பதில் அளித்தார் சாய்.
மேலும் அவர் பேசுகையில் ''ஆல்பம், சினிமாவுக்கு பெரிய வேறுபாடு இல்லை . இப்ப பலரும் பிரஷ் ஆக கேட்கிறார்கள். அதனால் சுதந்திரமாக பணியாற்றுகிறேன். முன்பு உள்ள இசையமைப்பாளர்களுக்கு டிரண்ட்டிங் என்ற பிரஷர் இல்லை, இப்போது வருகிறது. ஆனாலும், நான் டுவிட்டர், இன்ஸ்டாவில் இல்லை. ஆகவே, எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நல்ல விமர்சனங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். டுவிட்டரும், இன்ஸ்டாவும் நேரத்தை அதிகம் சாப்பிடுவதால். ஸ்டூடியோவில் சாதாரண போனை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி திரிஷா மேடம் போஸ்ட் போடுறாங்க. நான் யாரையும் இன்பூளுன்ஸ் செய்து, போஸ்ட் வைப்பது இல்லை. எனக்கு பிஆர் டீம் கிடையாது''என்றார்.




