இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் |

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன் நடிப்பில் 'அதர்ஸ்' படம் கடந்த வாரம் வெளியானது. முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருவர் கவுரியின் எடையை வைத்து கேள்வி எழுப்பினர். இதற்கு கவுரி, ‛‛உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். எடை பத்தி கேக்குறீங்க, அடுத்து என்னென்ன கேட்பீங்க. இது முட்டாள்தனமானது'' என நேரலையில் கோபமாக அந்த நபர்களுக்கு பதிலளித்தார்.
வருத்தம்
இதுபோன்ற கேள்விகளுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குஷ்பு, சின்மயி உள்ளிட்டோர் கவுரிக்கு ஆதரவு தந்துள்ளனர். இதனையடுத்து, கவுரி கிஷனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுடியூபர் வருத்தம் தெரிவித்திருந்தார். ‛‛நான் அந்த பெண்ணை உருவ கேலி செய்யவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
ஏற்க மாட்டேன்
இதற்கு பதிலளித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகை கவுரி கிஷன், ''பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல. கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி, யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்தவில்லை என மீண்டும் கூறுகிறார். வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என குறிப்பிட்டுள்ளார்.




