‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? |

மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிக்கும் திரவுபதி 2 படத்தில் ஜிப்ரான் இசையில் ‛என் கோனே' என்ற பாடலை பாடியிருந்தார் சின்மயி. மோகன்.ஜி படத்தில் பாடுவதா? அவர் சாதிய படங்கள் எடுப்பவர் ஆச்சே என்று சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகள் வர ''எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை''என்று சின்மயி மன்னிப்பு கேட்டார்.
''என்னுடன் திரவுபதி2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்'' என்று மோகன்.ஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் பேரரசு புது கருத்தை கூறியுள்ளார். ''இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே... பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு, உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் மோகன்ஜி வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது! என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். படம் வெளியாகும்முன்பே, முதல் பாடல் வெளியான நேரத்தில் இருந்து திரவுபதி 2 சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே சின்மயி மன்னிப்பு கேட்டது தெடர்பாக மாலை 4 மணிக்கு மேல் ஒரு வீடியோ வெளியிடுவதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். சின்மயி சொல்வது என்ன சித்தாந்தம் என தெரியவில்லை, அதுபற்றி எனக்கு புரியவும் இல்லை என்கிறார்.