ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹிந்தி சினிமாவில் அவருக்கு வரும் வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணமாக சில விஷயங்களை குறிப்பிட்டார். ஆனால் அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அதற்காக விளக்கமும் அளித்தார்.
இந்த நிலையில் பாலிவுட் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், “ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துக்கள் ரொம்பவே புண்படுத்துவதாக இருக்கிறது. ஒருமுறை அவரை சேனல் ஒன்றுக்காக பேட்டி எடுத்தபோது அவரிடம் அவரது 'மா துஜே சலாம்' என்கிற 'வந்தே மாதரம்' பாடலை ஒரு சில வரிகளாவது பாடுங்கள் அல்லது ஹம்மிங்காவது செய்யுங்கள் என்று கூறினேன்.. ஆனால் அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.. பொதுவாக இசைக் கலைஞர்கள் இது போன்ற பேட்டிகளில் இப்படி பாடுவதை புறக்கணிக்க மாட்டார்கள் என்பதால் அவரது செயல் என்னை ரொம்பவே அப்செட் ஆக்கியது” என்று எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி விளக்கம் கொடுக்கும் விதமாக பின்னணி பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2025 நவம்பரில் புனேயில் ஆர்கே லக்ஷ்மனின் நினைவு அவார்டு கான்சர்ட்டில் கூட 'மா துஜே சலாம்' பாடலை பாடினார். அது மட்டுமல்ல அவரது ஒவ்வொரு கான்சர்ட்டிலும் கூட அவர் இந்த பாடலை தவறாது பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
மேற்படி நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேட்டியின் போது, அவருக்கு ஒரு வேளை பாடுவதற்கு குரல் சரி இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அப்போது பாடுவது சரியாக இருக்காது என்று அவர் நினைத்திருக்கலாமே தவிர அவர் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை புறக்கணித்தது இல்லை” என்று கூறியுள்ளார்.




