தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொதுவாக பெரிய ஹீரோவானவர்கள் தங்களின் பழைய படங்கள், சின்ன படங்கள் பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் கவின் தான் நடிக்கும் 'மாஸ்க்' பட விழாவில் அது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ''என் லைப்பில் நான் நம்பும் விஷயம் ஒன்றுதான். இன்றைய நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அது. அதில் செய்ய வேண்டியதையெல்லாம் சரியாக செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் 'பீட்சா' படத்தில் தான் நான் சின்ன வேடத்தில் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும், ஜெயிப்போம் என நிரூபித்தவர் விஜய்சேதுபதி. அவர் என்னை வாழ்த்தியதற்கு நன்றி.
ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் மாஸ்க் கதையை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பது, பாடுவது, இசையமைப்பது, கச்சேரி என இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தூங்குகிறாரா என சந்தேகம் ஏற்படுகிறது. அவர் உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
கவின் நடித்த 'ஸ்டார், கிஸ்' படங்கள் பெரிய ஹிட் ஆகாததால் இந்த படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். அதனால் படம் குறித்து நன்றாக புரமோஷன் செய்கிறார் என்றும் தகவல்.