என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'தக் லைப்' படத்தின் நிகழ்ச்சி நடந்த போது நடிகர் கமல்ஹாசன், 'தமிழிலிருந்து பிறந்த கன்னடம்' என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னடர்களின் மத்தியில் சர்ச்சையை எழுப்பி படத்தின் பேனர்களை கிழிப்பதில் ஆரம்பித்து, படத்திற்குத் தடை விதிக்கப்படும் அளவிற்குப் போய் உள்ளது.
கமல்ஹாசனுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொதுப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பவர் என்பதில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுபோல தனது கட்சியின் பெயரிலேயே 'தமிழக வெற்றிக் கழகம்' என வைத்துள்ள, அடிக்கடி அறிக்கை வெளியிடும் விஜய்யும் இந்த விவகாரத்தில் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளனர்.
கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ரஜினிகாந்த், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜய் ஆகியோர் இந்த சர்ச்சை விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்களா, அல்லது அறிக்கை வெளியிடுவார்களா என சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆரம்பமாகி உள்ளது.
'தக் லைப்' படம் அடுத்தவாரம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் என்பதுதான் இப்போதைய நிலை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார். எனவே, ரஜினி, விஜய் இந்த விவகாரத்தில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்களது படங்களும் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.