என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏஎம் ரத்னம். தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள அப்படத்தை அவரது மகன் ஜோதி கிருஷ்ணாவும் இயக்கியுள்ளார்.
நேற்று முன்தினம் தான் சென்னையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போதும் கூட தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் கலந்து கொண்டு நீண்ட நேரம் பேசினார்.
இதனிடையே, தயாரிப்பாளர் ரத்னம் சுயநினைவு இழந்துவிட்டார் என வதந்தி பரவியது. அதற்கு ரத்னத்தின் தம்பி தயாகர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “அண்ணன் ஏஎம் ரத்னம் சுயநினைவு இழந்துள்ளதாகப் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் தான் இருக்கிறார். இது போன்ற தகவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகத்தில் அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ஸ்டிரைக், பவன் கல்யாண் தரப்பிலிருந்து தெலுங்கு திரையுலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம் ஆகியவை கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வதந்தியையும் யாரோ வேண்டுமென்றே பரப்பியுள்ளதாகத் தெரிகிறது.