நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தெலுங்குத் திரையுலகினருக்காக ஒன்றுபட்ட ஆந்திர மாநில அரசு வழங்கி வந்த 'நந்தி விருதுகள்' மிகவும் புகழ் பெற்றவை. 1964 முதல் வழங்கப்பட்டு வந்த அந்த விருதுகள் 2016ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என இரண்டாகப் பிரிந்த பின் விருதுகள் வழங்கப்படுவதில்லை.
இந்த ஆண்டு முதல் அந்தத் திரைப்பட விருதுகளை 'கட்டார்' விருதுகள் என்ற பெயரில் வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்து விருதுகளைப் பெறுபவர்கள் யார் என்பதை அறிவித்துள்ளது. கவிஞர், புரட்சிகர நாட்டுப்புறப் பாடகராக இருந்தவர் 2023ல் மறைந்த கட்டார். அவரது பெயரில்தான் தெலங்கானா மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது.
சீனியர் நடிகையான ஜெயசுதா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் இந்த விருதுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
2024ம் ஆண்டின் சிறந்த படமாக 'கல்கி 2898 ஏடி', படமும், அப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் சிறந்த இயக்குனராகவும் தேர்வாகி உள்ளனர். சிறந்த நடிகராக 'புஷ்பா 2' படத்தில் நடித்த அல்லு அர்ஜுன்', சிறந்த நடிகையாக '35 சின்ன கத காது' படத்தில் நடித்த நிவேதா தாமஸ், சிறந்த துணை நடிகராக 'சரிபோத சனிவாரம்' படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுகளைப் பெற்ற அல்லு அர்ஜுன், நிவேதா தாமஸ், எஸ்ஜே சூர்யா, ஆகியோர் தெலங்கானா மாநில அரசுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.