பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் |
'தக்லைப்' பட விழாவில் தமிழிலிருந்து கன்னட மொழி உருவானதாக கமல்ஹாசன் பேசிய விவகாரத்தை அந்த மாநிலத்தில உள்ள கன்னட அமைப்புகள் சர்ச்சையாக்கி வருகின்றனர். இது குறித்து தக்லைப் படத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் கருத்து சொல்ல வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பெங்களூருவில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சிவராஜ்குமார் பேசும்போது, ''நான் எப்போதுமே கமல் சாரின் தீவிரமான ரசிகன். ஒவ்வொரு தருணத்திலும் அவர் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். அதோடு நம்ம ஊர் பற்றி அவர் அடிக்கடி என்னிடத்தில் பெருமையாக பேசி இருக்கிறார். அவர் என்னைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசியதைதான் அனைவரும் பேசி இருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு கன்னட மொழி பற்றி பேசுகிறார்கள். அவர் நடித்த பட விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததே பெருமையான விஷயம்.
அதோடு நேற்று கூட அவர் இங்கே வந்திருந்தார். அப்போது இதுகுறித்து அவரிடத்தில் நேராகவே கேட்டிருக்கலாம். ஆனால் ஒருவர் கூட அது குறித்து அவரிடத்தில் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் இங்கே அவர் உங்கள் முன்பே அதுகுறித்து பேசி தெளிவுபடுத்தி இருப்பார். அப்போது ஏன் நீங்களெல்லாம் அமைதியாக இருந்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் யாராவது ஒருவர் பேசினால் மட்டும் கன்னட மொழி மீதான உங்களது பாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த பாசமானது எப்போதுமே இருக்க வேண்டும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டும் மொழியை கொண்டாடாதீர்கள்'' என்று கூறியுள்ளார் சிவராஜ்குமார்.
மேலும், ''தேவைப்பட்டால் கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கன்னட பெருமை பேசுவது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் கன்னட சினிமாவுக்காக என்ன செய்துள்ளீர்கள்? புதிய நபருக்கு வாய்ப்பு கொடுத்தீர்களா? கன்னடம் வளர வேண்டுமென்றால் எல்லா வழியிலும் அதை ஆதரிப்பது கடமையாகும். நான் சொல்வது சரியா தவறா என்பதை உங்களது மனசாட்சியை கேட்டு பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும். அதோடு கமல் சார் கன்னட சினிமாவுக்கு நிறைய செய்திருக்கிறார். எப்பொழுதுமே அனைவரையும் மதிக்கக்கூடிய ஒரு நல்ல திரைக்கலைஞர் அவர். எந்த மொழியையும் தவறாக சித்தரிக்க நினைக்க மாட்டார். என் மேல் உள்ள பாசத்தில் அவர் எதையோ பேசப்போக அதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டீர்கள்'' என்று அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசி உள்ளார் நடிகர் சிவ ராஜ்குமார்.