'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அவரது இசை பேசப்படுகிறது. அவர் இசையமைத்த படங்கள் சில சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் படங்களை இயக்க மாட்டேன் என பேசியுள்ளார். அவரை அடுத்து தற்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ், அனிருத்தைப் பாராட்டியுள்ளார்.
“பல படங்கள் அனிருத்தின் பின்னணி இசையால் மட்டுமே ஓடுகின்றன. ஆனால், 'மதராஸி' படத்தில் அப்படியில்லை. மற்ற விஷயங்களுடன் சேர்த்து இசையும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
சல்மான் நடித்த ஹிந்திப் படமான 'சிக்கந்தர்' என்ற மாபெரும் தோல்விக்குப் பிறகு ஏஆர் முருகதாஸ், 'மதராஸி' படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்.
மற்ற சில படங்கள் ஓடுவது அனிருத் இசையால் என சொல்லிவிட்டு, தன் படத்திற்கு அதுவும் ஒரு காரணம் என சமாளித்துள்ளார் முருகதாஸ். அவரும், அனிருத்தும் இணைந்த ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படம் தோல்விப் படம்தான். அந்தப் படத்தில் அனிருத்தின் பாடல்கள் கூட ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




