பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான படம் 'லோகா சாப்டர் 1 சந்திரா'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் கதாநாயகிக்கு முக்கித்துவம் கொடுத்துள்ள ஒரு படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுவது இதுவே முதல் முறை. தற்போது படம் 90 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விரைவில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகா, படம் மொத்தம் 5 பாகங்களைக் கொண்ட படம் என்கிறார் இயக்குனர் டொமினிக் அருண். அதில் 'சாப்டர் 1 சந்திரா' கடந்த வாரம் வெளியாகி உள்ளது. அடுத்து நான்கு பாகப் படங்கள் வர உள்ளது. அடுத்த இரண்டாவது பாகப் படம் எப்போது வெளியாகும் என்று அவர் சொல்லவில்லை.
ஐந்து பாகங்களுக்குமான ஸ்கிரிப்ட்டை முழுமையாக எழுதிய பின்புதான் முதல் பாகத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அடுத்த நான்கு பாகங்களுக்குமான ஸ்கிரிப்ட் தயாராகவே உள்ளதாம். துல்கர் சல்மான் தயாரித்துள்ள இந்தப் படம் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்பதால் வாங்கியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.