விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி! | துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் திறந்தார் டொவினோ தாமஸ் | உதவி செய்யுங்கள் : துரந்தர் படக்குழுவுக்கு பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை | 5 மணிநேரம் ரசிகர்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்த மம்முட்டி | எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோ | தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம் | 50 கோடியை கடந்த ‛யூத்' | லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா | 2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் சினிமாகாரர்கள் | தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன் |

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களிலேயே முன்னணி இளம் நடிகர் வரிசைக்கு உயர்ந்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் தற்போது அவர் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள 'டியூட்' திரைப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆக நாளை மறுநாள் (அக்.,17) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க, முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார்.
சமீபத்தில் இதன் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் படக்குழுவினர் கலந்து கொண்டபோது அங்கே செய்தியாளர்களில் ஒருவர் நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லையே என்று ஒரு சர்ச்சையான கேள்வியை முன் வைத்தார். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் அமைதியாக பதில் அளித்து கடந்து சென்று விட்டாலும் அந்த சந்திப்பில் சரத்குமார் அவருக்கு ஆதரவாக பேசினார். இதை தொடர்ந்து இன்னும் சில பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு புரமோஷனில் ஒரு பகுதியாக நடிகர் நாகார்ஜுனா நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரதீப் ரங்கநாதன். அப்போது இந்த ஹீரோ மெட்டீரியல் சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக அவருக்கு ஆதரவாக பேசிய நாகார்ஜுனா, “சில தலைமுறைகளுக்கு முன்பு ஒரு தீப்பொறி போல சினிமாவிற்குள் நுழைந்து அதன் போக்கையே ஒருவர் மாற்றினார். அவர் பெயர் ரஜினிகாந்த்.. அதன்பிறகு அதேபோல சில வருடங்களுக்கு முன்பு இன்னொரு தீப்பொறி போல ஒருவர் நுழைந்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் பெயர் தனுஷ். இன்னும் சில வருடங்கள் கழித்து இதோ தற்போது நான் பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன்” என்று கூறினார்.
அவரது பேச்சால் நெகிழ்ந்து போன பிரதீப் ரங்கநாதன், “சார் இது உண்மையிலேயே மிகப்பெரிய வார்த்தைகள்.. அதுவும் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வரும்போது இந்த உலகமே எனக்கு என்பது போல தோன்றுகிறது” என்று கூறினார்.




