சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு படங்கள் இல்லை சமீபத்தில் ஒரு செய்தி பரவ, அதற்கு சென்னையில் நடந்த ‛மொய் விருந்து' நிகழ்ச்சியில் அவர் பதிலடி கொடுத்தார்.
நான் தெலுங்கில் பிஸியாக இருக்கிறேன். நான் நடித்த தெலுங்கு படம் (சங்கராங்கி வஸ்துனம்) 350 கோடி வசூலித்தது. தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். மொய் விருந்து மாதிரி, விரைவில் என் திருமண விருந்தும் நடக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிக்காக பலரிடம் உதவி கேட்டேன். சிலர் மட்டுமே உதவினார்கள். அப்போது பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டேன். அதற்காக வருத்தப்படவில்லை. நாம் நல்லா இருக்கும்போது பலர் வருவார்கள். நம் கஷ்ட காலத்தில் சிலர்தான் வருவார்கள். அவர்களை மறக்க கூடாது "என்றார்.




