சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் 'மகாசேனா'. காந்தாரா பாணியில் காடு மற்றும் ஆன்மிக நிகழ்வுகளை கொண்டு உருவாகிறது. தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்குகிறார். விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ப்ரெட் ஜோஸ், இளக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. பிரவீன் குமார் மற்றும் எஸ்.என். அருணகிரி இசை அமைத்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் கூறும்போது, "மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை சொல்லும் படம். குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதை நடக்கிறது. படத்தின் 90 சதவீத பகுதி உண்மையான காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. திருவிழா காட்சிகளை மையமாகக் கொண்ட கிளைமாக்ஸ், பழங்குடி இசையையும் பக்தி இசையையும் இணைக்கும் புதிய முயற்சியாக படமாக்கப்பட்டுள்ளது. சேனா என்ற யானை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு காடு பற்றிய கதை மட்டும் அல்ல. மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படம். பேராசை இந்த தெய்வீக சமநிலையை குலைக்கிறது. ஆன்மிகம் அதைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு ப்ரேமும் இயற்கைக்கான மரியாதையையும், உயிரின் தெய்வீகத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தக் காடு தானே ஒரு கதாபாத்திரமாக உயிருடன், உணர்வுடன், ஆற்றலுடன் உள்ளது" என்றார்.




