மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு |

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மூத்த மகன் மறைந்த கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். இப்போது சினிமாவில் பிஸியான நடிகை ஆகிவிட்டார். குணசித்திர, காமெடி வேடங்களில் கலக்கி வருகிறார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக தொடங்கி, எமகாதகி, மெட்ராஸ் மேட்னி என சமீபத்தில் அவர் நடித்த பல கேரக்டர்கள் பேசப்படுவதால் இன்னும் பிஸியாகி வருகிறார்.
அந்தவகையில், அவர் கதை நாயகியாக நடித்த அங்கம்மாள் என்ற படம் நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
அங்கம்மாள் என்ற வயதான பெண் ஏன் ஜாக்கெட் அணிய மறுக்கிறாள். அதன் பின்னணி என்ன என்ற ரீதியில் இந்த கதை நகர்கிறது. ஏற்கனவே மும்பை , கேரளா திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் உட்பட பலர் நடித்துள்ளனர்.




