கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ருக்மணி வசந்த். 'சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ, சைட் பி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றவர். அந்தப் படங்களை ஓடிடி தளங்களில் பார்த்து அவரை ரசித்தவர்கள் நிறைய பேர்.
தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'ஏஸ்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் அவருக்கு சரியான அறிமுகமாக தமிழில் அமையாமல் ஏமாற்றத்தைத் தந்தது. அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் 'மதராஸி' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ருக்மணி வசந்த்.
கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் அதற்குள்ளாகவே திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ருக்மணி. 'ஏஸ்' ஏமாற்றினாலும் 'மதராஸி' படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை மயங்க வைக்கும் என்ற நம்பிக்கை அப்படக்குழுவிற்கு இருக்கிறதாம். ருக்மணிக்கு மட்டுமல்லாது முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் அப்படம் மீதான நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்கிறார்கள். செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.