நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஸ்ரீலங்காவில் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்', மோகன்லால், மம்மூட்டி நடிக்கும் 'பேட்ரியாட்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் 'பெத்தி' பட படப்பிடிப்பின் புதிய ஷெட்யூல் இலங்கையில துவங்கி உள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்காக இலங்கையின் உள்ள மிக பிரசித்தி பெற்ற குகை ரயில் பாதை ஒன்றை லொகேஷன் ஆக தேர்வு செய்து அதில் படத்திற்கான முக்கியமான சில காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் படமாக்கி வருகிறார்கள். அந்த லொகேஷனில் இருந்து எடுத்த புகைப்படங்களை தற்போது பெத்தி படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர். 2026 மார்ச் 27ம் தேதி இந்த படம் ராம்சரணின் பிறந்த நாளன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.