அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்னொரு பக்கம் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹசாரிகவுடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருகிறார். 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் குறித்து எந்தவித தகவலையும் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என ஒரு பதிவை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் என்னுடைய வாழ்க்கை முறையை எப்போதுமே உங்களிடம் ஒளிவு மறைவாக வைத்ததில்லை. கல்யாணம் என்றால் சொல்லாமலா இருக்கப் போகிறேன் ? நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் செய்வேன். இந்த செய்தியை பரப்பும் யாரோ ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுத்தபோது தன்னிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் அவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற தகவலை அவர் பரப்பியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.