சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்த பின்னர், அவர் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருடன் ஜோடியாக நடித்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வெற்றியும் பெற்று விட்டன. இந்த நிலையில் தற்போது தான் சலார் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, “இந்தப் படத்தில் ஆத்யா கதாபாத்திரமாக என்னை உருவாக்கியதற்கு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி . அதேபோல அற்புதமான மனிதரான டார்லிங் பிரபாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஒரு சிறப்பான படத்தில் கிடைத்த பாசிட்டிவான எண்ணங்கள், பணியாற்றிய அனுபவம் எல்லாமே ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது” என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஒளிப்பதிவாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.