ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக இத்தனை வருடங்களாக தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். தொடர்ந்து சில பல பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்', ஹனு ராகவுப்புடி இயக்கத்தில் 'பௌசி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.
நேற்று பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நாளில் மேலே குறிப்பிட்ட மூன்று படங்களின் அப்டேட்களை அதன் தயாரிப்பாளர்கள் தந்தார்கள். 'தி ராஜா சாப்' படத்தின் அசத்தலான புதிய போஸ்டர் ஒன்று, 'பௌசி' படத்தின் முதல் பார்வை, 'ஸ்பிரிட்' படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ ஆகியவை வெளியாகின. ஒரே நாளில் இத்தனை அப்டேட்கள் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகம், 'சலார்' படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவையும் அடுத்தடுத்து நடக்க உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த வருடம் பிரபாஸ் நாயகனாக நடித்து எந்த ஒரு புதிய படமும் வரவில்லை என்றாலும் அடுத்த வருடம் இரண்டு, மூன்று படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பாகுபலி 1, 2' ஆகிய படங்களை ஒன்றாக்கிய, பாகுபலி - தி எபிக்' படம் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியாகிறது.




