கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சினிமாவில் வில்லனாக அறிமுகமான ஆனந்தராஜ், 'கவர்மெண்ட் மாப்பிள்ளை' படத்தின் மூலம் ஹீரோவானர். அதன்பிறகும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் மீண்டும் வில்லனாக நடித்தார். பிறகு காமெடி, வில்லனாக நடித்தார்.
தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு 'மதறாஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இதில் அவருடன் சம்யுக்தா, தீபா, முனீஸ்காந்த், ராம்ஸ், ஷகிலா, சசிலயா, ஆராத்யா, மஸ்காரா அஸ்மிதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அண்ணா புரொடக் ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் ஏ.எஸ்.முகுந்தன் கூறும்போது, ''வட சென்னையின் மிகப்பெரிய டான் ஆக திகழும் ஆனந்த்ராஜின் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் இலக்குடன் காவல்துறை அதிகாரி சம்யுக்தா களமிறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஒரு டானின் வாழ்க்கையையும், அவனது இறுதிகட்ட வாழ்க்கையையும் எதார்த்தமாகவும், அதேவேளை நகைச்சுவையாகவும் சொல்கிறோம்" என்றார்.