பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

சென்னையில் தற்போது கடும் மழை பெய்து வருவதால் பாதிப்புகள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசும், பொதுமக்களும் இணைந்த வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் இணைய விரும்பிய நடிகை அம்பிகா அதற்கான லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப் குழுவில் சேர முயன்றபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு சென்று துணை கமிஷனர் விஜயகுமாரிடம் இதுகுறித்து முறையிட்டார். கமிஷனர் இது குறித்து விசாரித்தபோது வாட்ஸ்அப் குழுவில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்க்க இயலாது. அம்பிகாவின் கோரிக்கை தாமதமாக கிடைத்ததால் சேர்க்க முடியவில்லை என்பது தெரிய வந்தது.
அதைதொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் தன்னார்வலர்கள் குழுவில் நடிகை அம்பிகாவை இணைப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் திரும்பினார் அம்பிகா.




