பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! |

பூரி ஜெகன்நாத் தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இதில் தபு, துனியா விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சம்யுக்தா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் ஐதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் படம் உருவாகிறது.