தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”. இதில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். எல்.ஆர் ஈஸ்வரி பாடிய "பூந்தமல்லி டா" பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படம் நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27ம் தேதி மீண்டும் வெளியாகிறது. வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரவுடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரவுடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப் படத்தின் கதை. தற்போது நவீன ஏஐ தொழில் நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக வெளியாக உள்ளது.